கிறிஸ்துவ ஆலயம் இருக்கும் இடத்தில் நியாய விலை கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ...............
மாற்று இடம் அமைத்து தர கோரிக்கை;
கிறிஸ்துவ ஆலயம் இருக்கும் இடத்தில் நியாய விலை கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ............... நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த முள்ளிக்கெரை பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறையாக வசித்து வருகிறார்கள் எனவும் 1960 இல் இருந்து நகராட்சி பள்ளிக்கு மேற்புறம் அந்தோணியார் கோவில் காலம் காலமாக இருந்து வருவதாகவும் ஆனால் தற்போது அந்த இடத்தில் நியாய விலை கடை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் மேலும் கிறிஸ்துவ தேவ ஆலயம் இருக்கும் பகுதியில் மத சடங்குகளை நடத்தி வருவதாகவும் அந்த இடம் ஒரு புனிதமான இடம் என்பதாலும் அந்தப் பகுதியை நியாய விலை கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அதற்கு பதிலாக வேறொரு இடத்தை தேர்வு செய்து அப்பகுதியில் நியாய விலை கடையை அமைக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.