சூளகிரி: செண்டுமல்லி விலை வீழ்ச்சி: சாலை ஓரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்.
சூளகிரி: செண்டுமல்லி விலை வீழ்ச்சி: சாலை ஓரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செண்டுமல்லி பூக்கள் அதிகமாக விவசாயிகள் பியிரிட்டுள்ளனர். தற்போது வரத்து அதிகரிப்பால் மஞ்சள் நிற செண்டுமல்லி பூ போதிய விலைக்கு இல்லாததால் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. போதிய விலை இல்லாததால் விவசாயிகள் ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்ற இடத்தில் சாலை ஓரமாக செண்டுமல்லி பூக்களைக் கொட்டிவிட்டு சென்றனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.