தேய்பிறை அஷ்டமியையொட்டி
காசி காலபைரவர் கோவிலில் மிளகாய் யாகம் சிறப்பு பூஜை;
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருேக துட்டம்பட்டி ஆட்டையான் வட்டம் ராஜ முனீஸ்வரர் 21 அடி உயர சிலை காசி காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவிலில் மிளகாய் யாகம், செய்து சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் ஜாதகத்தை காலபைரவர் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொண்டனர். பூஜை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பூசாரி மாரியப்பன் செய்து இருந்தார்.