ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் அசோக் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் நவ்சாத் வரவேற்றார். மாநில தொழிற்சங்க தலைவர் சக்திவேல், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நல்வினை விஸ்வராஜ், சீனிவாசன், பூபதி, தமிழின்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் இந்தி திணிப்பை தடுக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் சாக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்கள் சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.