ரிக் தொழிலாளி மர்ம மரணம் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
ரிக் தொழிலாளி மர்ம மரணம் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு;
திருச்செங்கோடு அடுத்த வட்டூர் ஊராட்சி வேலனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 46இவருக்கு சவிதா என்ற மனைவியும் கோகுல் 22 மௌனிஷ் 19என்ற இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 17 வருடங்களாக சுபம் போர்வெல் நிறுவனத்தில்ரிக் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் ஆள்துளை கிணறு அமைக்கஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலி வந்தனா பகுதிக்கு சென்றிருந்த செந்தில்குமார் கடந்த 20 ஆம் தேதி மதியம் திடீரென இறந்து போனார்.குறித்து செந்தில்குமாரின் மனைவிக்கு தகவல் கொடுத்த ரிக் உரிமையாளர் மணிஅவரை மட்டும் ஆந்திரா அழைத்துச் சென்று பிரேத பரிசோதனை முடித்து உடலைசெந்தில்குமாரின் தாய் வீடுஉள்ள வட்டூர் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.செந்தில்குமார் இறப்பு குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் செந்தில்குமாரின் இறப்பு குறித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கிடைக்கவே செந்தில்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி செந்தில்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடல் வந்த ஆம்புலன்ஸ் உடன் அத்தி மரப்பட்டியில் உள்ள ரிக் உரிமையாளர் மணியின் வீட்டுக்கு கொண்டு வந்து உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.என போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்சண்முகம் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் மணியின் வீட்டிற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இறந்து போன மணியின் உடல் ஆந்திர மாநிலத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததற்குப் பிறகு அதில் ஏதாவது தவறு இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் செந்தில்குமாரின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் வட்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.