முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-22 14:03 GMT
கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக தொழிலாளர் அணி சார்பில் உதகை முள்ளிக்கொரை ஆதவரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, மதிய உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். உதகை நகர செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன்குமார், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, ஜெயகுமார், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், வினோத்குமார், ரமேஷ், கஜேந்திரன், மகாலிங்கம், திருச்செல்வம், ஜெகதீசன், மேத்யூஸ், பாபுலால், சங்கர், தீபக், யசோதா, தொ.மு.ச. ஆனந்த், சிவகுமார், ஸ்ரீதர், அமல், டான்டீ விஜி உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் டாஸ்மாக் சிவகுமார் நன்றி கூறினார்.

Similar News