பலருக்கு எடுத்து காட்டாய் மாறிய தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியின் ஊர்கூடி திருவிழா
ஆடல் பாடல் உடன் கலை கட்டிய ஊர்வலம்;
பலருக்கு எடுத்து காட்டாய் மாறிய தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியின் ஊர்கூடி திருவிழா நீலகிரிமாவட்டம் தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியின் ஊர்கூடி திருவிழா கோலகலமாக நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனம்மாள், பி.டி.ஏ. தலைவர் சிவநேச மலர் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர். பட்டதாரி ஆசிரியர்கள் தவமுரளி மற்றும் காருண்யா வரவேற்றனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும், கவுன்சிலருமான ஆலன் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாணவர்களான, எம்.எல்.ஏ., ஜெயசீலன், கவுன்சிலர் சேகர், டாக்டர் யாழினி உள்ளிட்டோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியர்கள் விஷ்ணு தாஸ், அஞ்சலி ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்து, ஊர் கூடி திருவிழாவில் நடனமாடி மகிழ்ந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் நன்றி கூறினார். பள்ளி தலைமை ஆசிரியராக சமுத்திர பாண்டியன் தான் பணிபுரியும் அனைத்துபள்ளிகளும் மிக சிறப்பான முறையில் மாணவமாணவிகள் கல்வியுடன் தனி திறமைகளை வளர்க்கும் விதமாக மிக சிறப்பாக செயல்பட்டு மாநில அரசின்விருதுகள் உள்ளிட்ட பல.விருதுகளை பெற்றவர் என்பது குறுப்பிடதக்கதாகும் நீலகிரிமாவட்டத்தில் தற்போது பல.அரசு பள்ளிகள் அபாரம் புரியும் பள்ளிகளாக மாறிவருவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்