வெலிங்டன் பகுதியில் மாடு மேய்த்து கொண்டு இருந்தவரை எதிர்பாராத விதமாக காட்டெருமை தாக்கியது

மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-04-22 14:23 GMT
வெலிங்டன் பகுதியில் மாடு மேய்த்து கொண்டு இருந்தவரை எதிர்பாராத விதமாக காட்டெருமை தாக்கியது நீலகிரி மாவட்டம் கண்டோன்மெண்ட் வெலிங்டன் பாபு கிராமத்தை சேர்ந்த சகாயநாதன் மகன் விக்கி வயது 28 என்பவர் வீட்டில் வளர்க்கும் மாடு மேய்த்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக காட்டெருமை ஒன்று கிராமத்தில் புகுந்து அவரை தாக்கியது இதில் அவருடைய கெண்டைக்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை அப்பகுதி மக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் உலிக்கல் ட்ரூக் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளி தேவதாஸ், 63, என்பவர் நேற்று காலை வெளியே சென்ற போது, காட்டெருமை தாக்கியுள்ளது. இதில் கால் பகுதியில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஊட்டி அரசு மருத்துவமனையில் அவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Similar News