கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-04-22 15:45 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 409.49 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து, 451.67 கன அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 363.67 கன அடி நீரும் வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 451.67 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. 44.28 அடியில், 41 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

Similar News