ஜெயங்கொண்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை துன்புறுத்திய கதண்டுகள் கூடு தீயணைப்புத் துறையினர் கூண்டோடு அகற்றம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை துன்புறுத்திய கதண்டுகள் தீயணைப்புத் துறையினர் கூண்டோடு அகற்றினர்;

Update: 2025-04-22 15:50 GMT
அரியலூர் ஏப்.22- ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை துன்புறுத்திய கதண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நான்காவது தளத்தில் கடந்த சில வாரங்களாக கதண்டு வண்டுகள் சிறிய அளவில் கூடு கட்டி இருந்தன. சிறிது சிறிதாக கூடு பெரிய அளவில் ஏராளமான கதண்டுவண்டுகள் கூடுகட்டி நோயாளிகளை துன்புறுத்தி வந்தன.இது குறித்து கதண்டுகள் நோயாளிகளை துன்புறுத்துவதாக அரசு மருத்துவ அலுவலர் மதியழகன் தீயணைப்புத் துறையினருக்கு நோயாளிகளை காப்பாற்றும் விதமாக கதண்டு கூடுகளை அழிக்க வேண்டுகோள் விடுத்தார். வேண்டுகோளுக்கு இணங்க ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) தர்மலிங்கம் தலைமையில் தீயணைப்பு பணியாளர்கள் கதண்டு கூட்டினை அப்புறப்படுத்தினர். இது குறித்து நோயாளிகளும் மருத்துவ அலுவலர்களும் தீயணைப்புத் துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Similar News