மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது
உடையார்பாளையத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் ஏப்.22- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் தாராசுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் அன்பழகன்(65). என்பவர் இடையார் சாலையில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து அன்பழகனை கைது செய்து அவரிடம் இருந்த 112 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரூ 5290 ஐ பறிமுதல் செய்தனர். _