பொதுமக்களுக்கு இடையூறு செய்த மூன்று பேர் கைது
பொதுமக்களுக்கு இடையூறு செய்த மூன்று ஏழை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் ஏப்.22- உடையார்பாளையத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த மூன்று பேரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழிசுகுடி கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு மகன் அண்ணாதுரை(36),உடையார்பாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் சின்னதுரை(26) ஆகிய இருவரும் தாண்டான் ஏரி அருகிலும் .செம்மண் பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் இளையராஜா(80) உடையார்பாளையம் மேலப்பாசிட்டி ஏரி அருகிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்தும் அந்த இடத்தை விட்டு செல்லாததால் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.