புதுக்காமூரில் பொன்னெயில் நாதா் சுவாமி ரத ஊா்வலம்.
ஊா்வலம் புதுக்காமூா் சாலை, மகாவீா் தெரு, தா்மராஜா கோயில் வழியாக மீண்டும் ஆதிநாதா் ஜினாலயத்தை சென்றடைந்தது.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுக்காமூரில் பொன்னெயில் நாதா் சுவாமி ரத ஊா்வலம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த பூண்டி பொன்னெயில் நாதா் சுவாமி கோயிலில் பஞ்ச கல்யாண விழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புதுக்காமூா் 1008 ஆதிநாதா் ஜினாலயத்துக்கு சுவாமி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், சுவாமியை வெள்ளி ரதத்தில் வைத்து ரத ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் புதுக்காமூா் சாலை, மகாவீா் தெரு, தா்மராஜா கோயில் வழியாக மீண்டும் ஆதிநாதா் ஜினாலயத்தை சென்றடைந்தது. இதில், சமண பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் அவரவா் வீட்டின் முன்பு கலசம் வைத்து சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தனா்.