காரிமங்கலத்தில் கால்நடைகள் விற்பனை அமோகம்

காரிமங்கலம் வாரச்சந்தையில் 1.15 கோடிக்கு கால்நடைகள் விற்பனை;

Update: 2025-04-23 02:03 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வரும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் ஏப்ரல் 22 நேற்று நடைபெற்ற வார சந்தையில் 650க்கும் மேற்பட்ட ஆடுகள் ஆடுகள் மற்றும் 600 மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் சுமார் 60 லட்சத்திற்கு ஆடுகளும் 52 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் 3 லட்சம் ரூபாய் அளவில் விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News