கிருஷ்ணகிரி:ஏரியில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி:ஏரியில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.;

Update: 2025-04-23 02:06 GMT
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரா பகுதி உதயகுமார். மகன் சித்தார்த்(16) 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே உள்ள பெலத்துார் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சித்தார்த் வந்திருந்தார். நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மாணவன் குளித்த போது எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News