புளுதிகரையில் இலவச பொது மருத்துவ முகாம்
புளுதிகரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்;
தர்மபுரி மாவட்டத்தில் ஆதி பவுண்டேஷன் என்ற தனியார் தன்னார்வ நிறுவனம் சார்பாக பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட புளுதிக்கரை கிராம பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா விமரிசியாக நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு நேற்று மாலை ஆதி பவுண்டேஷன் மற்றும் சேலம் பிரீத்தம் மருத்துவமனை சேவாபாரதி தமிழ்நாடு நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் மூட்டு தேய்மானம், கை கால்வலி, முதுகு வலி காது, மூக்கு, தொண்டை பிரச்சனை அதிக இரத்தப்போக்கு. கர்பப்பை ஆகியவை பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது இன்னும் முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏரளமான பெண்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.