பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி

சேலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்;

Update: 2025-04-23 03:36 GMT
சேலம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கி முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம், மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்று கோட்டை மைதானத்தில் முடிவடைந்தது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடை நிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருவேரங்கன், கோவிந்தன், திருமுருகவேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News