புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாளங்கரை கிராமத்தில் திருவரங்குளம் புகரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வயலில் நடவு செய்தனர். அப்போது, மணவாளங்கரை கிராம விவசாயிகள் தாங்கள் காலம் காலமா நடவு செய்யும் முறை, நீர்ப்பாய்ச்சுதல், களையெடுத்தல், உரம் போடுதல், அறுவடை செய்தல் உள்ளிட்ட சாகுபடி முறைகள் குறித்து மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.