புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதியைச் சேர்ந்த கொத்தமுத்துப்பட்டி, நகர்த்துப்பட்டி, மேரி நகர், கம்பத்தான்பட்டி, வலையன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் காலம் காலமாக தங்கள் கிராமங்களில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் சில தனிநபர்கள் பெயரில் இருந்து வருகிறது. அவர்களுக்கு மேற்படி விவசாயிகள் முறையாக கங்கானி மூலம் வாரம் செலுத்தி வருகின்றனர்.