நார்த்தாமலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
விபத்து செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூரைச் சேர்ந்த கருப்பையா (75) என்பவர் தனது வீட்டிலிருந்து புத்தாம்பூருக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது புத்தாம்பூர் டீக்கடை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.