புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் கருப்பூரைச் சேர்ந்த கருப்பையா (55) என்பவர் அறந்தாங்கி பேருந்து நிறுத்தம் டாஸ்மார்க் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பின் பிணையில் விடுவித்தனர்.