ஜெகதாபட்டினம் அடுத்த அய்யம்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோணி குரூஸ் (58), தொண்டியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா (45) ஆகிய இருவரும் அந்தோணி குரூஸின் வீட்டின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தகவலின் பேரில் விரைந்து வந்த ஜெகதாபட்டினம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவையும், ரூ.11,000 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.