போப் மறைவிற்கு அஞ்சலி, ஏராளமானோர் பங்கேற்பு

போப் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட ஆயர் தலைமையில் அஞ்சலி, ஏராளமானோர் பங்கேற்பு;

Update: 2025-04-23 04:16 GMT
கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி மறை மாவட்டம் சார்பில் தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி போப் பிரான்சிஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட ஆயரின் செயலாளர் ஆல்வின், உதவி பங்குத்தந்தை இயேசு பிரபாகரன் உள்ளிட்ட பங்கு தந்தைகள், மறை மாவட்டம் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

Similar News