அரக்கோணம் அருகே பாலியல் சீண்டலில் வாலிபர் கைது
அரக்கோணம் அருகே பாலியல் சீண்டலில் வாலிபர் கைது;
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவில் ஆவடி செல்வதற்காக கணவருடன் இளம்பெண் ஒருவர் பயணிகள் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருந்தார். கணவர் கழிவறைக்கு சென்ற நேரத்தில் இளம் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை இன்று கைது செய்தனர்.