ஆற்காடு: நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது;
ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 28). இவரது உறவினர் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஆதம் பாஷா. கடந்த 21-ந் தேதி இரவு ஆதம் பாஷா, பிலால் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி பிலால் தான் வைத்திருந்த கத்தியால் ஆதம் பாஷாவை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.