வீடுகளையும், நிலங்களையும் காப்பாற்ற கோரி மனு

அடுக்கத்தில் 3 தலைமுறையாக வசித்து வரும் வீடுகளையும் விவசாய நிலங்களையும் வனத்துறையினர் காலி செய்ய கூறுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்;

Update: 2025-04-23 04:46 GMT
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள. கொடைக்கானல் அருகே அடுக்கம் ஊராட்சியில் உள்ள சாமக்காடு, நெல்லிவரை, பிரகாஷபுரம், சந்திர மண்டலம் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைக்கும் மேலாக வாசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான தொழிலே விவசாயம் தான். கேரட் பீட்ரூட் வெள்ளைப் பூண்டு சௌசௌ போன்ற மழை காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் இந்தக் காடுகளை வருவாய்துறையில் இருந்து ரிசர்வ் ஃபாரஸ்ட்டாக மாற்றி விட்டதாகவும் ஆகையால் ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் யாரும் இருக்கக் கூடாது என்று கூறி காலி செய்ய வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்கும் வனத்துறையினர் அனுமதி அளிக்காமல் தடுத்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக அரசுக்கு வரி கட்டியும் அடுக்கம் பஞ்சாயத்தில் வீட்டு வரி கட்டியும் மின்சார இணைப்பு பெற்று வாசித்து வரும் தங்களை வனத்துறையினர். காலி செய்யுமாறு கூறினால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றும் விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாத நிலையில் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி இப்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News