ராணிப்பேட்டையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம் பங்களையும் அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றப்படவில்லை. அதைத்தொடர்ந்து வாலாஜா நகராட்சி ஆணையாளர் இளையராணி தலைமையில், சுகாதார ஆய்வாளர் தட்சணா மூர்த்தி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், உதவி களப்பணியாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது.