ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்
பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மேக்கலாம்பட்டி ஏரி 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது பாலக்கோடு, கடமடை, கரகத அள்ளி, செம்மநத்தம், பேளாரஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. சீமைகருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தர்மபுரி ஆட்சியர் சதிஸ் ஆலோசனைபடி, டாக்டர் கலாம் பசுமை நல அறக் கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம், ஆதிபவுண்டேஷன் ஆகிய தொண்டு அமைப்புக்கள் இணைந்து மேக்லாம்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியில் தொடர்ந்து 5ஆம் நாளாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.