நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்;
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நடன சபாபதி தலைமை வகித்தார்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசிய போது கூறியதாவது தமிழகத்தின் துணை முதல்வர்திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு கிளைகளிலும் இளைஞர் அணி துவக்க நகர, பேரூர், ஒன்றிய கழகநிர்வாகிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடத்த வேண்டும் வீடு வீடாக சென்று மாணவர்களை மாணவர் அணியில் இணைக்கும் பணியினை பகுதி கழகச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நகர ஒன்றிய பேரூர் கழகங்களில் சார்பணி நிர்வாகிகள் நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது மக்களிடம் நேரடியாக நமக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில்அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தல்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் தினசரி நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி, இந்திராணி,மாவட்ட துணைச் செயலாளர்கள் மயில்சாமி,சாந்தி பேரூர் கழகச் செயலாளர்கள் திருமலை, கார்த்திக் ராஜா, ரமேஷ்,தனராஜ் நகர செயலாளர்கள் திருச்செங்கோடு கார்த்திகேயன் பள்ளிபாளையம் குமார் குமாரபாளையம் விஜய் கண்ணா குமாரபாளையம் ஞானசேகரன் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ நாச்சிமுத்து தளபதி செல்வம் எலச்சிபாளையம் தங்கவேல், செல்வராஜ், பரமத்தி கபிலர்மலை மோகனூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம் ஏ பி ஆர் சண்முகம், முருகன், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலாஜி துணை செயலாளர்கள் பூக்கடை சுந்தர் நவலடி ராஜா கார்த்திகேயன் முரளி திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் உள்ளிட்ட மகளிர் அணி சார்பணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.