என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி
தூத்துக்குடியில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார்.;
தூத்துக்குடியில் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார். மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாவட்ட கல்வி அலுவலர் ஆண்ட்ரோ ரூபன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், மும்தாஜ், பொன்னப்பன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.