கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

மாரண்டஅள்ளி அருகே செவத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது;

Update: 2025-04-23 10:21 GMT
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் சுப்ரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டனர். மாரண்டஅள்ளி அருகே செவத்தம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியின் போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் கையில் பிளாஸ்டிக் கவருடன் நின்று கொண்டு இருந்தார். காவலர்களை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார் காவலர்கள் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பஞ்சப்பள்ளி அருகே சொரக்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பதும், அங்கு அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது காவலர்கள் வழக்குபதிந்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News