குடிநீர் குழாயை பழுது நீக்க பொதுமக்கள் கோரிக்கை

பொது பிரச்சனைகள்;

Update: 2025-04-23 10:53 GMT
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பேலஸ் சாலையில், கிங் ரோட்டரி ஹால் எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. குடி தண்ணீர் கிடைக்காமல் பலரும் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த கோடை காலத்தில் இவ்வாறு குடிதண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. குடிநீர் குழாயை விரைவாக பழுது நீக்கம் செய்ய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News