புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராம பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர் தைக்க தொட்டி பழுதடைந்து விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலை இருக்கின்றது. குறிப்பாக இப்பகுதியில் அதிகளவில் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் செல்லக்கூடிய நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மறுசீரமைப்பு செய்து விபத்து நடக்காதவாறு சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.