கிருஷ்ணகிரி மாணவிகள் கேலோ இந்தியாவுக்கு தேர்வு.
கிருஷ்ணகிரி மாணவிகள் கேலோ இந்தியாவுக்கு தேர்வு.;
18 வயதிற்கான கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2025 விளையாட்டு போட்டி மே 4 முதல் 15ம் தேதி வரை பிகார் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக மகளிர் கைப்பந்து அணிக்கான தேர்வு ஏப்.16ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நவநீதா, தனலட்சுமி ஆகியோர் மகளிர் கைப்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் இரண்டு பேரும் தேர்வு நடைபெற்ற இடத்திலேயே தமிழக அணையில் சேர்ந்து தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்