நவோதயாப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாட்டம்.
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை 10. மணியளவில் தமிழர்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.;
நிகழ்ச்சியை நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவியர்கள் பள்ளி மாணவ மாணவியர் தலைவியோடு இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும் பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்களும் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். வரவேற்பு நடனத்தோடு உணவுத் திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் இந்த உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் பெருந்தானிய உணவுகள் மற்றும் இயற்கை உணவுகள் பலரசங்கள் கூல்வகைகள் மாவுஉருண்டைகள் மிட்டாய் வகைகள் இயற்கையான குளிர்பானங்கள் மற்றும் பழவகைள் என பல்வேறு உணவுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய அரிசி வகைகளான குதிரைவாலி மாப்பிளைச் சம்பார் கருப்பு கவுனி பூங்கார் அரிசி மூங்கில் அரிசி என பல்வேறு பாரம்பரிய அரிசியில் தயாரித்த உணவுகளையும் விற்பனை செய்தனர். 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உறவினர்கள் மாணவர் மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர் வயதானவர்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்ற சுவையான உணவுகளையும் சத்தான உணவுகளையும் சுவைத்து மகழ்ந்தனர் பகல் 1.00 மணிக்கு உணவுத்திருவிழா நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது. பள்ளியின் முதல்வர் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சி 1.00 மணிக்கு நிறைவு செய்தார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு உணவுத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்கள் பல்வேறு சுவைமிக்க உணகளை தயாரித்து கொண்டு வந்து விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.