ஓசூரில் பிஜேபி வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
ஓசூரில் பிஜேபி வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிஜேபி கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிஜேபியின் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிஜேபி தேசிய பொதுக்குழு உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் பங்கேற்று உரையாற்றினார். இப்போது இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆளும் கட்சியினரால் தலையிட்டு காரணமாக மாம்பழ விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழம் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஆதார விலையாக பதினைந்து ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என பிஜேபியின் சார்பில் வலியுறுத்தபட்டது. இந்தகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.