கிருஷ்ணகிரி: கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி:கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சிக்க பூங்குருத்தி பகுதியை சோ்ந்த சிவாஜி இவரது மனைவி கெளசல்யா (20) இவா், தனது நிலத்தில் இருந்த ராகி பயிரை அறுவடை செய்து, கதிரடிக்கும் இயந்திரத்தின் மூலம் ராகி தானியத்தை பிரிக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது அவா் அணிந்திருந்த துணி கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட அவா் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் கெளசல்யாவின் உடலை மீட்டு இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.