கிருஷ்ணகிரில அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரில அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-23 13:36 GMT
கிருஷ்ணகிரி புதிய போருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரே அமைச்சர் பொன்முடியை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் கோட்ட மாத்ருசக்தி அமைப்பாளர் உஷா வரவேற்றார். மாவட்ட தலைவர் திலீப்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தின் ஆணி வேரான சைவ, வைணவ சமயங்களை வைத்து பெண்களை ஆபாசமாக இழிவு படுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News