ராசிபுரம் பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து. தீ விபத்தில் கடையில் இருந்த நகைகள்,பொருட்கள் எரிந்து சேதம்..

ராசிபுரம் பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து. தீ விபத்தில் கடையில் இருந்த நகைகள்,பொருட்கள் எரிந்து சேதம்;

Update: 2025-04-23 13:43 GMT
.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் உடையார் ஜுவல்லரி ஆனது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை பணியாளர்கள் கடையை திறந்த பொழுது கடையில் உள்ளே இருந்த கரும் புகையுடன் துர்நாற்றம் வீசு வந்தது .தீ விபத்தானது நடந்துள்ளது குறித்து பணியாளர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த உரிமையாளர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது நகை, பொருட்கள், ஏசி, சிசிடிவி, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. பின்னர் ஊழியர்களுடன் கடையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி மேலும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா அல்லது வேறு ஏதாவது காரணங்களை என்பது குறித்து மின்வாரிய அலுவலர்களும், ராசிபுரம் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் நகை கடையில் தீ விபத்து நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் எவ்வித கடைகளுக்கும் தீ பரவாமல் நகைக்கடையில் மட்டுமே தீ விபத்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.. மேலும் இச்சம்பவம் குறித்து அருகே உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை நேரில் சென்று பார்த்து விசாரித்தனர்.

Similar News