ரயில் நிலையத்தில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் முகாம்
ரயில் நிலையத்தில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.;
அரியலூர், ஏப். 23 - அரியலூர் ரயில் நிலையத்தில், மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பயணிகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழக்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல், பயணிகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசலை வழங்கி முகாமை தொடக்கி வைத்து, கோடை வெயில் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே வெயில் காலங்களில் திரவ ஆகாரங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூடுமானவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்திட வேண்டும் என அறிவுரை வழங்கினர். முகாமுக்கு ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அபிராமி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் அருள் பிரியன், சஞ்சய் மற்றும் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் கரைசல் வழங்கப்பட்டது. :