ராசிபுரத்தில் பெண்ணை தாக்கிய ஆண் நண்பர். தர்ம அடி கொடுத்து காவலரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..
ராசிபுரத்தில் பெண்ணை தாக்கிய ஆண் நண்பர். தர்ம அடி கொடுத்து காவலரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவரது பெண் தோழியான புவனேஸ்வரி ஆகிய இருவரும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேறு பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமாருக்கும் புவனேஸ்வரி இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பிரவீன் குமார்,பேருந்து நிலையத்தில் வைத்து புவனேஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனை கண்ட பொதுமக்கள் பிரவீன் குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அப்பெண்ணை மீட்டனர். பின்னர் தகவலின் பெயரில் ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் பிரவீன் குமாரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட புவனேஸ்வரி சிகிச்சைக்காக ராசிபுரம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான புவனேஸ்வரி கூறுகையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்திற்கு பதிவு செய்துள்ளதாகவும்,இந்த நிலையில் பிரவீன் குமாருக்கும் புவனேஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக நட்பாக பழகி வருவதாகவும் தன்னை திருமணம் செய்வதாக பிரவீன் குமார் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது பிரவீன் குமார் நீ அழகாக இருப்பதாக கூறி அணிந்திருந்த தோடு,கொலுசு மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கழட்டித் தருமாறு புவனேஸ்வரிடம் கேட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி நகைகளை கழட்டி வழங்கிய போதிலும் நீ அழகாக இருப்பதால் தான் பிரச்சனை என கோரி பிரவீன்குமார், புவனேஸ்வரியை பேருந்து நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...