ராசிபுரத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது...
ராசிபுரத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது...;
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி வெப்பம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலில் தாகம் தனிப்பதற்காக பல்வேறு கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைத்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. தொடர்ந்து தினம் தோறும் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, கூல்ரிங்ஸ் பழங்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் புதன்கிழமை அன்று மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பூபதி தலைமையில் பொதுமக்களுக்கு நீர் மோர்,கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் எம் .பாலசுப்பிரமணியம், மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, கட்சியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்..