அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி கண்ட்ரோல்மென்ட் காவல்துறையை கண்டித்து அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகமும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-23 14:20 GMT
அரியலூர், ஏப்.23- திருச்சி கன்டோன்மென்ட் காவல் துறையைக் கண்டித்து, அரியலூர்  நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க கொடிமரங்களை அகற்றி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ச.மகேந்திரன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடுத்து, கைது செய்த திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கண்ணன், உதவிக் கோட்டப் பொறியாளர் புகழேந்தி ஆகியோர் தொழிற்சங்கத்துடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் சூரியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அம்பேத்கர் கண்டன உறையாற்றினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Similar News