வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி

வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி;

Update: 2025-04-23 15:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி, நேற்று நடைபெற்றது.வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சித்தார்த், இந்த பயிற்சியை துவக்கி வைத்தார்.உதவி பேராசிரியர் காயத்ரி, வீட்டு தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம், பயிர் அமைப்பு மற்றும் தேர்வு, விதை நேர்த்தி, நாற்றங்கால் மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை நடைமுறைகள் குறித்து விளக்கினார். இயற்கை உரங்கள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள மாதிரி தோட்டத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News