நாமக்கல் போட்டி தேர்வு நூலக வளாகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்!

நாமக்கல் போட்டி தேர்வு நூலக வளர்ச்சி பணிக்கு நிழற் கூடம் மற்றும் புத்தகங்கள் வாங்க ரூ.5 இலட்சம் நன்கொடையாக வழங்குவதாக கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.;

Update: 2025-04-23 15:48 GMT
மனிதனின் சமூக, பொருளாதார மற்றும் நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது புத்தகங்கள். உலகம் முழுவதும் (ஏப்ரல்- 23) புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலக புத்தக தினவிழாவை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் போட்டி தேர்வு நூலக வளாகத்தில் மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமையில் புத்தக விழா நடைபெற்றது.விழாவில் போட்டி தேர்வு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்,தமிழாசிரியர் செல்வ செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்,
மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பசுமை மா.தில்லை சிவக்குமார் மாவட்டம் முழுவதும் நூலகங்களை பாதுகாக்கும் பராமரிக்கும் அறிவார்ந்த சமுதாயம் உருவாக பாடுபடும் நூலக அலுவலர்களை வாழ்த்தி பாராட்டினார்.
கம்பன் கழகம் மற்றும் பசுமை நாமக்கல் தலைவர் வ.சத்திய மூர்த்தி சிறப்புரை ஆற்றி பேசுகையில்.... நான் தொழில் அதிபராக உருவானதற்கு அடிப்படை காரணம் நூல்களே சிறு வயதில் சென்னை மயிலாப்பூர் நூலகத்தில் நூலகருக்கு உதவியாக இருந்து கொண்டு பல நூல்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது,
நூல்கள் வாசிப்பே எனது வாழ்வில் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு காரணம்.
நூல்களே கடவுள் கடவுளுக்கு அருகாமையில் இருப்பவர்கள் நூலகர்களே என வாழ்த்தி பாராட்டினார்.போட்டி தேர்வு நூலக வளர்ச்சி பணி நிழற் கூடம் புத்தகங்கள் வாங்க ரூ.5 இலட்சம் நன்கொடையாக வழங்குவதாக கூறினார்.வளையப்பட்டி அரசினர் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழ்ச் செல்வன், மோகனூர் அரசினர் பள்ளி தமிழாசிரியர் வீரராகவன் ஆகியோர் எழுதிய புத்தகங்களுக்காக வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் கவிஞர் சிந்தனை பேரவை அன்புச் செல்வன் மைய நூலக புரவலர் முகமது இரபி மற்றும் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் நூலக அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக போட்டி தேர்வு நூலகர் ஜோதிமணி நன்றி கூறினார்.

Similar News