ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பயணிகள் கோரிக்கை!

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-04-23 16:13 GMT
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் பிஸ்கெட் பாக்கெட்டுகள், அட்டை பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், டீ ஸ்டால், பிளாஸ்டிக் கூடைகள், பழங்களை அடுக்கி வைத்துள்ளனர். கடையின் வெளியே சுமார் 10 அடியை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். எனவே புதிய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Similar News