இந்து முன்னணியினர் மலர் தூவி மரியாதை!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 28 இந்துக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 28 இந்துக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பிரார்த்தனை செய்து மோச்ச தீபம் ஏற்றினர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கோ.மகேஷ், கோட்ட பொருளாளர் எஸ் டி ஆர் பாஸ்கரன், கோட்ட செயலாளர் அ. பிரவீன் குமார் மற்றும் இந்து முன்னணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.