மதுரை விரகனூர் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 15 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்குபள்ளி முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார. முதன்மை செயல் அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார்பள்ளி தாளாளர் வேல்மோகன் இயக்குனர் சசிகுமார் வரவேற்புரை கூறினர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை பென்ஸ் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் மதுரை விமான நிலைய துணை பொது மேலாளர் அருண் மோகன்,மத்திய தொழில் பாதுகாப்பு படை முதன்மை கமாண்டன்ட் சங்கர் குமார் ஷா, ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை உயர்நீதிமன்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் மாணவரிடம் பேசுகையில் மாணவர்களே நீங்கள் மற்றவரிடம் பேசும்போது நிதானமாகவும் கனிவாகவும் பேசுங்கள் அது உங்களை வளமாக்கும் என்றார்.