காஷ்மீரில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்காக மோட்ச தீபம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்தலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்காக மோட்ச தீபம்!;

Update: 2025-04-23 17:04 GMT
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. காஷ்மீர் பஹகாவில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் ஆன்மா நற்கதி அடைய தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர், ராஜா, துரைராஜ் உட்படப பலர் கலந்து கொண்டனர்

Similar News