கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் கருப்பு பட்டை அணிந்து முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்;
பணி பாதுகாப்பு சட்டம் வேண்டி தருமபுரி மாவட்டம் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு பட்டை அணிந்து நேற்று ஏப்ரல் 23 மாலை ஆர்பாட்டம் தர்மபுரி ஔவையார் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில் கணினி முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். இதில் 800க்கும் மேற்பட்ட அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதில் போக்சோ சட்டத்தில் தவறாக ஆசிரியர்களை கைது செய்வது தொடர்கதையாக இருப்பதை கண்டித்தும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை வழங்க வேண்டியும்,சரண் விடுப்பு ஒப்படைப்பு தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தர்மபுரி அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .